Copyright

© 2012 - 2026, Swetha Sundaram The articles on this blog are a collection of the author's studies and/or inferences made by the author from such studies. The posts on the vedic civilizations and symbolisms in vedic texts is the result of intense study undertaken by the author and the inferences made by the author from these studies. Please ensure to cite this blog if using material from this blog. All other rights are reserved. No part of this publication may be sold, licensed, or used for commercial purposes without prior written permission from the author. Disclaimer The information in this book is for educational/informational purposes only. The author assumes no responsibility for errors or omissions. Use at your own risk. This blog is copyright material and must not be copied, reproduced, transferred, distributed, leased, licensed or publicly performed or used in any way except as specifically permitted in writing by the author, as allowed under the terms and conditions under which it was permitted by applicable copyright law. Any unauthorised distribution or use of this text may be a direct infringement of the author’s rights, and those responsible may be liable in law accordingly.

Friday, 29 December 2017

கோதையின் கீதை - 2

 
 
 

 
"அதையும் பஞ்சாயத்தில் முடிவு செய்து விட்டார்கள். நம் அஞ்சு லக்ஷ பெண்களையும், கண்ணன் கண் காணிக்கவேண்டும் என்று உத்தர வு இட்டிருக்கிறார்கள். கண்ணன் சிறு பாலகனாக இருந்தாலும், மிக சாமர்த்தியதுடன் கன்றுகளையும் , பசுக்களையும் மேய்பதை எல்லோரும் அறிவார்கள். அப்படி பட்ட சாமர்த்தியம் உடைய கண்ணனே நம் கன்னிகைகளை ரக்ஷிப்பான் என்று எல்லோரும் நம்புகிறார்கள். கண்ணன் இருக்க, நமக்கு என்ன கவலை?"
 
வ்ருந்தா  தேவியின் வார்த்தையை கேட்டு, ராதை ஆனந்த கடலில் மூழ்கினாள். கண்ணனுக்குத்தான் எத்தனை கருணை! ராதையும் அவள் தோழிகளும், பிரிவினால் ஏற்பட்ட துயர கடலில் மூழ்கிருப்பதை கண்டு, அவர்களை ரக்ஷிப்பதற்கு அன்றோ சீதோஷ்ணநிலையை மாற்றி இருக்கிறான்!
 
வ்ருந்தா  தேவி மேல பேச முற்பட்டாள். "பஞ்சாயத்தின் முடிவை கேட்டு கண்ணன் என்ன சொன்னனான் என்று தெரியுமா?"
 
அவளின் வார்த்தையை கேட்டு, சுற்றி நின்று கொண்டு இருந்த அத்தனை பெண் மணிகளும் கொல்  என்று சிரித்தனர்.
 
"சீக்கிரம் சொல்லு , பிறகு சிரிக்கலாம் . கண்ணன் என்ன சொன்னான்? "
" அதை கேட்க நீ அங்கு இல்லாமல் போய்விட்டாயே! அவன் என்ன சொன்னான் தெரியுமா?,' என்று வினவிய வ்ருந்தா  தேவி  மறுபடியும் இடி இடி என்று சிரிக்க தொடங்கினாள்.
 
அப்பொழுது, யமுனை ஆற்றங்கரையில் பெண்களின் சிரிப்பு ஓலி எதிரொலித்தது. சிரிப்பு ஓலி காட்டுத் தீ போன்று அங்கே பரவியது. அந்த சிரிப்பு ஓலி அங்கு இருந்த பறவைகளுக்கு இடையூர் ஏற்படுத்த , கூட்டம் கூட்டமாக பறவைகள் ஆகாயத்தை நோக்கி பறக்க தொடங்கின. பறவைகளின் இறக்கையில் இருந்து கிளம்பிய சப்தம், பெண்களின் சிரிப்பொலியுடன் கலந்து  அங்கு ஒரு பெரும் ஆரவாரத்தை  உண்டு பண்ணியது
 
வ்ருந்தா  தேவி கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்க முயன்றாள். "இரு, " என்று சொல்லிவிட்டு "கண்ணன்,' என்று அராம்பித்தாள் ஆனால் ஆரம்பித்த வார்த்தையை முடிக்கமுடியாமல் மறுபடியும் சிரிக்க தொடங்கினாள். பிறகு ஒரு வழியாக சிரிப்பை அடக்கி கொண்டு, "ஐயோ! இப்படி என்னை பெண் பிள்ளைகளுடன் பழக சொல்கிறீர்களே! இப்படி பெண்களுடன் பழகினால் , காதும் மூக்கும் அறுந்து விழுந்துவிடும் என்று என் அம்மா சொல்லியிருக்காளே. நான்  காது மூக்குடன்  அழகாக இருப்பது ஏன் உங்களுக்கு பொறுக்கவில்லை?" என்று அழுதான் கண்ணன்," என்று சொல்லி முடித்தாள் வ்ருந்தா  தேவி ."அவன் மழலை பேச்சைக் கேட்க நீ அங்கு இல்லாமல் போய்விட்டாயே!"
 
"அய்யோ, அப்படி என்றால் கண்ணன் பெண்களை கண்காணிக்க மாட்டானா? " என்று பதறினாள் ராதையின் தாயார்.
 
"கவலை படாதே. எல்லோரும் சேர்ந்து கண்ணனை ஒத்துக்கொள்ள வைத்துவிட்டோம். "
 
இப்படி கண்ணன் தன்  லீலையினால் வ்ருந்தாவனத்தில்  வசித்த கோப கன்னிகைகளுக்கு, தன் உடன் பழகும் பெரும் பாக்கியத்தை  பெரியோர்களின் அனுமதியுடன் கிடைக்கும் படி செய்தான்.
 
"இன்று சாயங்காலம், மறக்காமல் ராதையை யமுனை கரைக்கு அனுப்பு. எல்லா கோப கன்னிகைகளும் இன்று மாலை நோம்பு நோற்பதை பத்தி கலந்து ஆலோசனை செய்ய தீர்மானித்து இருக்கிறார்கள். கோதை இவர்களுக்கு நோன்புப் பத்திய   முக்கியமான தகவல் கொடுப்பாள். "
 
"என்ன, கோதை இவர்களுக்கு வழி காட்டுவாளா? இதை ஏன் முன்னமே சொல்லவில்லை? கோதை இருந்தால் நமக்கு என்ன கவலை? கோதை இவர்களுக்கு துணையாக வழிகாட்ட இருந்தால், கண்ணன் வராவிட்டாலும் பரவாயில்லை,' என்றாள் ராதையின் தாயார். "கோதை ஒரு தெய்வீக குழந்தை! அவள் நம் பெண்களுக்கு வழி காட்ட  முன் வந்திருப்பது நாம் செய்த பாக்கியமே ஆகும்!"
 
"சரியாக சொன்னாய். அவள் என்ன சாதாரண பெண்ணா? துளசி புதரின் அடியில் தோன்றிய ஒரு தெய்வீக குழந்தை. தந்தை போல மகள் என்று நல்ல பெயரை பெற்று கொண்டு, இந்த சிறு வயதிலேயே பெருமாளுக்கு பக்தியுடனும், ஸ்ரத்தையுடனும்  புஷ்ப கைம்கர்யம்  நித்யபடி செய்து கொண்டு வருகிறாள். இப்படி பக்தியே உருவெடுத்த ஒரு பெண்ணை நாம் பெற்றது நாம் என்றோ செய்த புண்ணியமே," என்று மகிழ்ந்தாள் மல்லிகை என்ற ஒரு பெண்மணி.
 
இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த ராதையின் மனது பர பரத்தது. தன் தோழிகளுடன் உடனே இந்த நல்ல செய்தியை பகிர்ந்து கொள்ள ஆவலுடன் துடித்து கொண்டு இருந்தாள்.
 
"அம்மா, எனக்கு சில நிமிடம் அனுமதி தருவாயா? லலிதாவிடம் இந்த செய்தியை சொல்ல வேண்டும்."
 
"என்ன? சில நிமிடமா? உன்னுடை சில நிமிடம் என்றால் அது நாள் கணக்காக கூட ஆகலாம் என்று எனக்கு தெரியாதா! லலிதாவுக்கு ஏற்கனமே சொல்லியிருப்பார்கள். சாயந்திரம் பார்த்துக்கலாம், இப்போ என்ன அவசரம்? " என்று சொன்ன ராதையின் தாயார், தன் பெண்ணின் முகம் வாடுவதை பார்த்து சிரித்தாள் , " அட பயித்தியக்கார பெண்ணே! சாயந்திரம் உன் தோழிகளுடன் பேசி மஃகிழலாம். "
 
ராதையின் மனசு யமுனை ஆற்றங்கரையை  விட்டு நகர மறுத்தது. அன்று நாழிகை எப்பொழுதையும் விட மிக மெல்லமாக செல்வதாக தோன்றியது. யாரோ வீட்டு  கதவை தட்டும் சத்தம் கேட்டு, தன் கனவு லோகத்தில் இருந்து திரும்பினாள் ராதை.
 
"யாரு என்று பார்," என்று அம்மா சொல்வதற்கு முன், வீட்டுக் கதவை திறந்த ராதை, தன் தோழி லலிதாவை கண்டு மகிழ்ந்தாள்.
 
"அம்மா, லலிதா வந்து இருக்கிறாள்."
 
"ஐந்தே நிமிடம்," என்று கெஞ்சினாள் லலிதா.
 
"சரி, ஐந்து நிமிடத்தில் என்ன பேசி கொள்ள வேண்டுமோ பேசி முடியுங்கள்."
 
அம்மாவின் அனுமதியை பெற்ற ராதை, ஒரு மானை போல துள்ளி தோட்டத்திற்குள் லலிதாவை பின் தொடர்ந்து ஓடினாள். தோட்டத்தில் , மல்லிகை பந்தலுக்கு கீழ், தன் தோழி ஷ்யாமா காத்து கொண்டு இருப்பதை கண்டு ஆச்சரியப் பட்டாள்.
"நாங்கள் இன்று மலை நடக்க இருக்கும் சத் சங்கத்தைப் பற்றி உனக்கு தெரியப் படுத்துவதற்காக வந்தோம்," என்று ஆரம்பித்தாள் ஷ்யாமா.
 
"அது தான் எனக்கு முன்னமே தெரியுமே," என்று குறுக்கிட்டாள் ராதை.
 
"பேச விடு," என்று அதட்டினாள் ஷ்யாமா. "இன்று மாலை , கோதை நம் செயல்திட்டதை பற்றி பேசுவாள்...."
 
"அதுவும் எனக்கு தெரியும்," என்று மறுபடியும் குறுக்கிட்டாள் ராதை.
"நோன்பு நோற்பதைப் பற்றி நமக்கு கோதை சொல்லுவாள் என்று எல்லோருக்குமே தெரியும்."
 
"நாங்கள் இங்கே நோன்பைப் பற்றி பேச வரவில்லை. நம் செயல்திட்டம் ரஹஸ்யம்.."
 
" நோன்பு நோற்பதில் என்ன ரஹஸ்யம் இருக்கமுடியும்?"
 
"எங்களை பேச விட்டால் தெரியும்!" என்று கண்டித்தாள் ஷ்யாமா.
"பெரியோர்களின் செயல்திட்டம் சீதோஷ்ணநிலை சீர் செய்வதற்காக, ஆனால், நம் செயல்திட்டம், கண்ணனையே கணவனாக பெறுவதற்காக. "
 
"கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது ஆனால் எப்படி முடியும்? இவ்வளவு முக்கியமான சத் சங்கத்தை கண் காணிக்க கண்டிப்பாக பெரியோர்கள் பலர் இருப்பார்கள். அவர்கள் மத்தியில், எப்படி கண்ணனை நம் கணவனாக அடைவதை பற்றி பேசுவது?"
 
"அதுவாகோதை நமக்கு மட்டும் புரியும்படி புதிராக பேசுவாள். "
 
"அர்த்தம் நமக்கு புரியாவிட்டால்?"
 
"பெரியோர்கள் இல்லை என்றால், தெளிவாக பேசுவாள், பெரியோர்கள் இருந்தால், புதிராக பேசுவாள் ஆனால், அவள் என்ன பேசினாலும், நமக்கு புரியும்படி தான் இருக்கும்."
 
தோழிகளுடன் பேசி விட்டு வீட்டிற்கு திரும்பிய ராதையின் மனது பரபரத்தது. தன் மனதை கண்ணனிடம் பறி கொடுத்த ராதை, காரியங்களில் கவனம் செலுத்தவில்லைகுழம்பில் வெல்லமும், பாயசத்தில் உப்பும் போடாமல் தாயார் தடுத்து நிறுத்தினாள். ஒரு வழியாக மாலை பொழுது வந்தது. தோழிகளை காணத் துள்ளி எழுந்தாள் ராதை.
"நன்றாக இருக்கிறது!" என்று ராதையின் அம்மா கண்டித்தாள். "இத்தனை பேர் மத்தியில் இப்படியா ஆடை உடுத்திக்கொண்டு போவது? முகம் கழுவி, புது நீல நிற பட்டு பாவாடை உடுத்திக் கொண்டு போ. "
 
ராதை அதி வேகமாக புது ஆடை உடுத்திக்கொள்ள சென்றாள். அவள் ஆடை உடுத்திய பின், அம்மா கொடுத்த நகைகளை போட்டுக்கொள்ள ஆரம்பித்தாள். ஒரு காதில் தோடு மாட்டி கொண்டு இருக்கும் சமயத்தில், தோழி லலிதா வாசல் கதவை தட்டினாள். தோழி வந்த சந்தோஷத்தில் , ராதை ஒரு காதில் மட்டும் தோடு போட்டு கொண்டு ஓடினாள்.
 
 
 
கீதை தொடரும்....

Translate

Blog Archive

Search This Blog